பொது செய்தி

தமிழ்நாடு

இதோ உங்களுக்கும் வேலை!

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களை இணைத்து, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தை, கடந்த வாரம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து, தங்களின் கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணிவாய்ப்பு பெறலாம்.தனியார் துறையினர் தங்கள் நிறுவன காலிப்பணியிடங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடலாம்.
பதிவு செய்பவர்களுக்கு, நேர்காணல் நடத்தி, ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய நிர்வாகிகள் கூறுகையில், 'கொரோனா காரணமாக, கோவையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வந்த தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகளை, தற்காலிகமாக நடத்த இயலாத நிலை உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள், இந்த இலவச இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X