பொது செய்தி

தமிழ்நாடு

விசிலுக்கு பதில் 'காலிங் பெல்'அரசு பஸ்களில் அறிமுகம்

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
விசிலுக்கு பதில் 'காலிங் பெல்'அரசு பஸ்களில் அறிமுகம்

சென்னை : கொரோனா தொற்றை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர்களுக்கு விசிலுக்கு மாற்றாக 'காலிங் பெல்' வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் அரசு பஸ்கள்
இயக்கப்படுகின்றன.


கிருமிகள் பரவும் வாய்ப்பு



ஆனாலும் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த பயணியருடன் தான் இயக்கப்படுகின்றன. ஊழியர்கள் பயணியர் முகக் கவசம் அணிவதுகட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிந்துள்ள நடத்துனர்களால் 'விசில்' ஊதி பஸ்சை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மேலும் வாயில் விசில் வைத்து ஊதுவதால் காற்றின் வழியாக நோய் கிருமிகள் பரவும் வாய்ப்பும் உள்ளது.அதை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் சோதனை அடிப்படையில் 10 பஸ்களில் 'பேட்டரி'யில் இயங்கும் 'காலிங் பெல்' வழங்கப்பட்டுள்ளது.
இதன் பொத்தான் நடத்துனர் கையிலும் ஒலிப்பான் ஓட்டுனர் இருக்கைக்கு அருகிலும் பொருத்தப்படுகிறது.


ஒலிப்பான்



நிறுத்தத்துக்கு முன் பயணியர் ஏறிய பின் நடத்துனர் பொத்தானை அழுத்தினால் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் உள்ள ஒலிப்பான் ஒலி எழுப்புகிறது.இது பயணியரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மற்ற போக்குவரத்து கழகங்களிலும் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என நடத்துனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூன்-202010:40:03 IST Report Abuse
skv srinivasankrishnaveni இது ஒன்னும் புதுசுஇல்லீங்க நம்ம கிராமங்களில் காலிங்ப்பில் வச்சு ஓட்டுநர் அருகிலே இருக்கும் நடத்துனர் இறங்கவேண்டிய ஆர் நிக்கனும்னா தன அருகில் இருக்கும் கயிறை ழுப்பாக ஓட்டுநர் வண்டிய நிறுத்துவதாக
Rate this:
Cancel
Krismoo - Vellore,இந்தியா
24-ஜூன்-202010:11:02 IST Report Abuse
Krismoo வ.மணி சிங்கப்பூர் அறிவு ஜீவி நீ அமெரிக்காவிலே பெரிய சைன்டிஸ்டா இருந்திருக்கணும் .
Rate this:
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-202009:31:01 IST Report Abuse
RADE யப்பா சாமி இவனுக (திராவிட கட்சி) அளப்பறைக்கு அளாவே இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X