கவிழ்ந்து கிடக்குது குப்பைத் தொட்டி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

குப்பையை தொட்டியில் கொட்டுங்கசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, தக்காளி மார்க்கெட் அருகில், சாலையோரம் குப்பை தொட்டி இருந்தும், குப்பை வெளியிலேயே கொட்டிச் செல்கின்றனர். இக்குப்பை மறுநாள் காலை வரை கிடக்கும் இக்குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது.- விஜயகுமார், சுந்தராபுரம்.

சாக்கடை கால்வாயை துார் வாரணும்தடாகம் ரோடு, இடையர்பாளையம், பரிநகர் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது; இக்கால்வாயை துார்வார வேண்டும்.- விஜய், பரிநகர்.

தரைப்பாலத்தை சீரமைக்கணும்மதுக்கரை பச்சாபாளையத்தில் உள்ள, தரைப்பாலம், சிதிலமடைந்துள்ளது. கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், பாலம் இடிந்து விழும் சூழல் உள்ளது. இப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.- சிவராமன், பச்சாபாளையம்.

போக்குவரத்துக்கு இடையூறுசெல்வபுரம், முத்துசாமி காலனியில், மாதா கோவில் லைன், இரண்டாவது வீதியில், சாலையை ஆக்கிரமித்து, நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், குப்பை அள்ளும் வாகனம், இந்த வீதிக்குள் வருவதே இல்லை.- காமராஜன், முத்துசாமி காலனி.

நான்கு நாளுக்கு ஒருமுறை துாய்மை பணிசுண்டப்பாளையம், குறிஞ்சி நகர் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டிகளில், சேகரமாகும் குப்பை, நான்கு நாளுக்கு ஒருமுறை மட்டுமே, அப்புறப்படுத்தப்படுகிறது. தொட்டி நிரம்பி வழியும் நிலையில், இவற்றின் அருகிலும் குப்பை கொட்டப்படுகிறது.- சந்தோஷ், குறிஞ்சி நகர்.

சாலையோரம் குப்பையால் அவதிபோத்தனுார் - நஞ்சுண்டாபுரம் ரோட்டில், பயன்படுத்திய படுக்கை, பாய்கள் உள்ளிட்ட, கிழிந்த துணிகளும் குவிக்கப்படுகின்றன. துாய்மை பணியாளர்கள் இவற்றை அள்ளி செல்லாததால், பல நாட்களாக இவை அப்படியே கிடக்கிறது.- சுரேஷ், போத்தனுார்.

மின் கம்பத்தை மாற்றணும்பீளமேடு, முருகன் நகரில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- வெள்ளிங்கிரி, முருகன் நகர்.

நாய் தொல்லை அதிகரிப்புசாய்பாபா காலனி, கே.கே.புதுார், எஸ்.கே.வி.நகரில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.- ஆனந்த், எஸ்.கே.வி.நகர்.

மின் விபத்து அபாயம்கல்வீரம்பாளையம், விஜயநகர குடியிருப்பு பகுதியில் உள்ள, சர்ச் அருகில், மரக்கிளைகள் மின் கம்பியில் உரசுகின்றன. இக்கிளைகளை வெட்டி, மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.- சந்தானகுமார், விஜயநகர குடியிருப்பு.

பட்டேல் ரோட்டில் வாகன நெரிசல்ராம்நகர் பட்டேல் ரோடு, வடகோவை மேம்பாலம் அருகில், சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும், இருசக்கர வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- அன்பு, ராம்நகர்.

கணபதி மாநகரில் வேகத்தடை கணபதி மாநகர், டெக்ஸ்டூல் சுப்ரமணியம் நகரில், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த, வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.- முரளி, கணபதி மாநகர்.

பயனற்ற குப்பை தொட்டிபாப்பம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட, செந்துார் நகரில் வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டி பயனற்ற நிலையில், கவிழ்ந்து கிடக்கிறது. இதனால், குப்பை தொட்டி அருகில் குவிக்கப்படுகிறது. இக்குப்பையும், மாதம் ஒருமுறை மட்டுமே அள்ளப்படுகிறது.- குமார், பாப்பம்பட்டி.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட, நல்லாம்பாளையம், ராமசாமி நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:511), கடந்த நான்கு மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. பலமுறை மின் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- ஜெயகுமார், ராமசாமி நகர்.

பிரதான குழாயில் கசிவு; குடிநீர் வீண்மதுக்கரை மார்க்கெட் ரோடு, அபிராமி மருத்துவமனை எதிரில், அஷ்டலட்சுமி நகரில், ஆழியாறு பிரதான குழாயில் ஏற்படும் கசிவால், குடிநீர் வீணாக சாலையில் தேங்கியுள்ளது; ரோடும் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- குமாரவேல், அஷ்டலட்சுமி நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X