பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் பயண அட்டை ஆக., வரை பயன்படுத்தலாம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாற்றுத்திறனாளிகள் பேருந்து இலவச பயண அட்டையை, 2020 ஆக., வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக்கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது:பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள், மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கும், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள், பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, 2019-20ம் ஆண்டில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்தாண்டு வழங்கப்பட்ட பயண சலுகை அட்டையை புதுப்பிக்காமல், வரும் ஆக., வரை பயன்படுத்திக்கொள்ளலாம் . மீண்டும் புதுப்பிப்பது தொடர்பான அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X