தொற்று நோய் பரப்பியதாக  54 பேர் மீது வழக்குப்பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று நோய் பரப்பியதாக  54 பேர் மீது வழக்குப்பதிவு

Added : ஜூன் 24, 2020
Share

கோவை:தொற்று நோயை மற்றவர்களுக்கு பரப்புதல் சட்டத்தின் கீழ், 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து, கோவைக்கு வருபவர்கள், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர். அவர்களது வீடுகளில், மாநகராட்சி சுகாதார துறை சார்பில், ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.அவ்வாறு தனிமைப்படுத்திய பகுதிகளில் வசிப்பவர்கள், வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி சுற்றி திரிபவர்களை கண்காணித்து, அவர்கள் மீது தொற்று நோய் பரப்புதல் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கோவை மாநகர பகுதியில், தடை உத்தரவு மீறி சுற்றி திரிந்த, 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று நோயை கவனக்குறைவாக மற்றவர்களுக்கு, பரப்புதல் சட்டப்பிரிவு, 269 மற்றும் 270ன் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம்,5, செல்வபுரம்,6, போத்தனுார், 4, சிங்காநல்லுார்,4, பீளமேடு,7, சரவணம்பட்டி,4, உள்ளிட்ட 15 போலீஸ் ஸ்டேஷன்களில், நேற்று முன்தினம், 54 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X