சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு எண்ணை மாற்றி பயணம்; கார் பறிமுதல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கருமத்தம்பட்டி:பதிவு எண்ணை மாற்றி, பெங்களூருவில் இருந்து கோவை வந்த கார், பறிமுதல் செய்யப்பட்டது.கடந்த மூன்று நாட்களில், கருமத்தம்பட்டி செக்போஸ்ட்டில் மட்டும் விதிகளை மீறி வந்த, 50க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அளவுக்கு அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சை, கலெக்டர் ராஜாமணி பறிமுதல் செய்தார்.நேற்று மாலை ஆர்.டி.ஓ., (தெற்கு) தனலிங்கம், தாசில்தார் மீனாகுமாரி ஆகியோர் செக்போஸ்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி வந்த, காரை நிறுத்தி ஆய்வு செய்தனர்.விதிகளை மீறி அதிக நபர்கள் காரில் இருந்ததும், பதிவு எண்ணை மாற்றி வந்ததையும் கண்டுபிடித்தனர். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X