ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கண்மாய்| Dinamalar

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கண்மாய்

Added : ஜூன் 24, 2020
Share
பெரியகுளம்:மாவட்டத்தில் பெரியகண்மாய் என அழைக்கப்படும் பெரியகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் அழியும் நிலை உள்ளது. இங்கு மணல் கொள்ளையும் தாராளமாக நடக்கிறது.இக்கண்மாய் 4 கி.மீ., துாரம் உள்ளது. சோத்துப்பாறையில் திறந்து விடப்படும் நீர் முதலில் இங்கு வருகிறது. முன் மூன்று போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டது.
 ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கண்மாய்

பெரியகுளம்:மாவட்டத்தில் பெரியகண்மாய் என அழைக்கப்படும் பெரியகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் அழியும் நிலை உள்ளது.

இங்கு மணல் கொள்ளையும் தாராளமாக நடக்கிறது.இக்கண்மாய் 4 கி.மீ., துாரம் உள்ளது. சோத்துப்பாறையில் திறந்து விடப்படும் நீர் முதலில் இங்கு வருகிறது. முன் மூன்று போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இந்த கண்மாய் நீரை நம்பி நேரடியாக ஆயிரக்கணக்கான ஏக்கரும், கண்மாய் ஊற்றினால் கிணற்று பாசனத்தில் 500 ஏக்கர் விவாயமும் நடந்து வந்தது. சிலர் கண்மாயைஆக்கிரமித்து நுாற்றுக்கணக்கான ஏக்கர் மா, தென்னை, இலவம் மரங்கள் வளர்க்கின்றனர்.

இவர்கள்ஆண்டு குத்தகையாக தலா ரூ.5 லட்சம்- ரூ.10 லட்சம் வரை லாபம் பெறுகின்றனர். சோத்துப்பாறையில் திறந்து விடப்படும் நீர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தோப்புகளில் தேங்கி அவர்கள் 'மகசூல்' அள்ளுகின்றனர். விவசாயிகள் ஏமா்றம் அடைக்கின்றனர். கண்மாயில் மணல் கொள்ளையால் ஆங்காங்கே செயற்கையாக குழிகள் ஏற்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுவது என்ன:

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X