குழாய் பதித்த குழியில் பஸ் சிக்கியதால் பாதிப்பு| Dinamalar

குழாய் பதித்த குழியில் பஸ் சிக்கியதால் பாதிப்பு

Added : ஜூன் 24, 2020
Share
 குழாய் பதித்த குழியில்  பஸ் சிக்கியதால் பாதிப்பு

அன்னூர்:அன்னூரில் குழாய் பதித்த குழியில், சிக்கிய அரசு பஸ் ஒருபுறமாக சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்திற்காக, அன்னூரில் 1,022 மி.மீ., விட்டமுள்ள குழாய் பதிக்கப்படுகிறது. நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் அன்னூர் நகரில், அவிநாசி ரோடு, சத்தி ரோடு சந்திப்பில், குழிக்குள் சிக்கியது. பஸ்சின் இடதுபுற முன், பின் சக்கரங்கள் குழிக்குள் இறங்கின. பஸ் ஒருபுறம் சாய்ந்தது. பஸ்ஸில் இருந்த 35 பயணிகள் அலறி அடித்தபடி இறங்கி தப்பினர். போலீசார் கிரேன் மூலம் தூக்கி நிறுத்த, நடவடிக்கை எடுத்தனர்.அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம், 'குழாய் பதிக்கும் இடத்தில் மண்ணை மேலோட்டமாக நிரப்புகின்றனர். வாகனங்கள் செல்ல செல்ல, மண் சரிந்து குழியாகி விடுகிறது' என புகார் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X