பொது செய்தி

தமிழ்நாடு

அழிந்து வரும் ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கங்கள்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி:கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை கைவிட்டதால் ஆண்டிபட்டி பகுதியில் ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டியில் விவசாயத்திற்கு அடுத்து கால்நடை வளர்ப்புத்தொழில் உள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நுாற்றுக்கணக்கான செம்மறி, வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டுக்கு முன் தனியார் ஆதிக்கத்தில் இருந்த ஆடு வளர்ப்பாளர்களுக்கு அரசு மூலம் கடன் உதவி கிடைத்தது. ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் அமைத்து பலர் பயன்பெற்று வந்தனர்.

அரசின் தொடர் கண்காணிப்பின்மையால் அந்த கூட்டுறவு சங்கங்கள் தேய்ந்து போனது. அவைசெயல் இழந்ததால் உறுப்பினர்கள் மீண்டும் தனியாரிடம் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

டி.சில்க்வார்பட்டி ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் குள்ளப்பன் கூறியதாவது: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 11 ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. எதுவும் செயல்படவில்லை. உறுப்பினர்களுக்கு கடன் வழங்க சங்கங்களில் நிதி இல்லை. ஆடு வளர்ப்புத்தொழிலை ஊக்கப்படுத்தவும், உறுப்பினர்களுக்கு கூட்டுறவு வங்கிமூலம் கடன் கிடைக்கவும் கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X