பெ.நா.பாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெ.நா.பாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஜூன் 24, 2020
Share

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன் செல்லும் சாலையின் முன்புறம் சிறு கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தன. இதனால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, விபத்துகள் ஏற்பட்டன.பேரூராட்சி நிர்வாகத்தினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், ஆக்கிரமிப்புகள் கடைகள் அகற்றப்படவில்லை. நேற்று மாலை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் தலைமையில், ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X