சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நேர்காணல் நடத்திய நிறுவனத்துக்கு 'சீல்'

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கோவை:கோவை நியூ சித்தாபுதூர் சின்னசாமி நாயுடு சாலையில், எம் இந்தியா லேண்ட் டெவலப்பர்ஸ் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி, கோவை மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த, 120 பேரை அழைத்து நேர்காணல் நடத்தியுள்ளனர்.நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும், ஓர் இடத்தில் கூடியிருந்தது, ஆய்வின் போது தெரியவந்தது. தகவல் அறிந்த கோவை வடக்கு தாசில்தார் மகேஷ் தலைமையிலான அதிகாரிகள், நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர். இந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X