பொது செய்தி

தமிழ்நாடு

கே.பி.ஆர்., கல்லுாரி சார்பில் ஆசிரியர்களுக்கு சானிடைசர்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 கே.பி.ஆர்., கல்லுாரி சார்பில்  ஆசிரியர்களுக்கு சானிடைசர்

கோவை:கே.பி.ஆர்., இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் தயாரிக்கப்பட்ட, ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட சானிடைசர், கோவையில் உள்ள, பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க, பள்ளிக் கல்வித்துறையிடம் வழங்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் அகிலா கூறியதாவது:கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கல்லுாரி சார்பில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய, 'சோஷியல் பிரைம்' என்ற, புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி சானிடைசர் உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி கல்லுாரியின் வேதியியல் துறை சார்பில், சானிடைசர் மற்றும் கைகழுவும் திரவம் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த சானிடைசரை, கோவை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க, பள்ளி கல்வித்துறை அலுவலர் உமாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்லுாரி செயலர் நடராஜன், வேலைவாய்ப்புத்துறை அதிகாரி தாமரைக்கண்ணன் பங்கேற்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X