பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை: வணிக வளாகம், ஜவுளி கடை மூடல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 சமூக இடைவெளியை பின்பற்றவில்லை: வணிக வளாகம், ஜவுளி கடை மூடல்

கோவை:கோவையில், சமூக இடைவெளி பின்பற்றாத காரணத்தால், மாநகராட்சி அதிகாரிகளால், வணிக வளாகம், ஜவுளி கடை நேற்று மூடப்பட்டது. குளிர்சாதன வசதி பயன்படுத்தியதால், நகைக்கடைக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது.டவுன்ஹால், பெரிய கடை வீதியில், 44 கடைகள் உள்ள வணிக வளாகத்தில், சமூக இடைவெளியின்றி, வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.நைட்டி கடையில் கூட்டம்வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்ததையும், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பதையும் உறுதி செய்து, வணிக வளாகத்தை பூட்டினர். எதிர்புறத்தில் இருந்த, நைட்டி விற்பனை செய்யும் கடையில், ஒரே நேரத்தில், 40க்கும் மேற்பட்ட பெண்கள் நின்றிருந்தனர்.நோய் பரவக்கூடிய வாய்ப்பு இருந்ததால், அக்கடையையும் பூட்டினர். ரோட்டை ஆக்கிரமித்து, அக்கடை கட்டப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஆக்கிரமிப்பை தாமாக அகற்றினால் மட்டுமே, சாவி திரும்ப வழங்கப்படும் என எச்சரித்தனர்.நகைக்கடையில் 'ஏசி'பிரபல நகை கடை ஒன்றின் மேல்தளத்தில், குளிர்சாதனம் பயன்படுத்திய குற்றத்துக்காக, 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அங்குள்ள ஜவுளிக்கடைக்குள் சென்ற அதிகாரிகள், 33 சதவீத ஊழியர்களே பணியில் இருக்க வேண்டும்; மீறினால், 'சீல்' வைக்கப்படும். வாடிக்கையாளர் வருகையை, மொபைல் போன் எண்ணுடன் பதிவேடு பராமரிக்க வேண்டும் என, எச்சரித்தனர்.இதேபோல், இடையர்பாளையம் பகுதியில், ஐஸ்கிரீம் பார்லரில், சமூக இடைவெளியின்றி, வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்தனர். அதை பார்த்த சுகாதார ஆய்வாளர்கள், அக்கடையை பூட்டி, 'சீல்' வைத்தனர். பான் மசாலா கடை அருகே, எச்சில் துப்ப அனுமதி அளித்த குற்றத்துக்காக, அக்கடையையும் பூட்டி, 'சீல்' வைத்தனர்.ஐந்து குழுக்கள்!ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட்டில், கூட்டம் அதிகமாக இருந்ததால், இரும்பு தகரத்தால் மூடப்பட்டது. இருப்பினும், தரைக்கடை நடத்துவது தொடர்கிறது. அதனால், மெக்ரிக்கர் சாலை, பூ மார்க்கெட், மதுரை காளியம்மன் கோவில் வீதி, சண்முகம் சாலை, லங்கா கார்னர் சாலை ஆகிய வீதிகளுக்கு, தலா, 5 பேர் வீதம், 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தினமும் கள ஆய்வு செய்து, பூ வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X