ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி சார்பில் ஆன்லைன் கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி சார்பில் 'ஆன்லைன்' கருத்தரங்கு

Added : ஜூன் 24, 2020
Share

கோவை:கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், 'இண்டஸ்ட்ரி கனெக்ட் 2020' என்ற கருத்தரங்கு, ஆன்லைனில் நடந்தது.கல்லுாரி தலைவர் மோகன்ராம் கூறியதாவது:ஊரடங்கு காலத்தில், மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், இந்த ஆன்லைன் கருத்தரங்கு நடத்தப்பட்டது. கல்லுாரி நடத்திய, 25 கருத்தரங்குகளில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஒவ்வொரு கருத்தரங்கிலும், 1,500க்கும் மேற்பட்ட, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ராபர்ட்பாஷ், கேப் ஜெமினி, வெர்ச்சுரா, டெக் மஹிந்திரா, ஐபிஎம், ஜோேஹா, ஆல்ட்ரான், பிளெக்ஸ், ெஹக்சாவேர், மிட்சுபிஷி எலெக்ட்ரிக், மல்டிகோர்வேர் உள்ளிட்ட, பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த, நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X