சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சம்: கடைகள் அடைப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கொரோனா பரவல் அச்சத்தால், நெகமம், வடசித்துார் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, ஊரடங்கு போன்று காட்சிஅளித்தது.கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, கிராம ஊராட்சிகளில் வீதிகள், ரோடுகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கிராமங்கள் தோறும், கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாகனங்களில் வருவோரை கண்காணித்து, முகக்கவசம் அணியாதோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.இந்நிலையில், வடசித்துாரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.அதேபோல, நெகமம் பகுதியில், பெட்டிக்கடைகள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன, மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X