பொது செய்தி

தமிழ்நாடு

கார்பன் உற்பத்தி சீராகாததால் தேங்காய் சிரட்டைகள் தேக்கம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 கார்பன் உற்பத்தி சீராகாததால் தேங்காய் சிரட்டைகள் தேக்கம்

உடுமலை:கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி சீராகாததால், தேங்காய் சிரட்டை விற்பனையாகாமல், கொப்பரை களங்களில் தேங்கி வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை சார்ந்த, பல்வேறு சிறு, குறு தொழில்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டும், உலர்களங்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடுதலாகி வருகிறது.இந்த களங்களில், கொப்பரை பிரித்தெடுத்த பின், தேங்காய் சிரட்டைகள் வீணாகி வந்தன. பின்னர், இவற்றை பயன்படுத்தி, ஐஸ்கிரீம் கப் உட்பட பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பில் சிலர் ஈடுபட துவங்கினர். அதே போல், சிரட்டைகளை எரித்து, குறிப்பிட்ட வெப்பநிலையில், தண்ணீரால் குளிர்வித்து, கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலைகள், காங்கேயம், உடுமலை பகுதியில், துவக்கப்பட்டது.இதையடுத்து, மூலப்பொருளான தேங்காய் சிரட்டைக்கு நல்ல விலை கிடைக்கத்துவங்கியது. இத்தகைய தொழிற்சாலைகளில், 'கொரோனா' தாக்கத்தால், கடந்த மாதம் உற்பத்தி நிறுத்தப்பட்டது; இதன் விலையும், டன்னுக்கு, 9 ஆயிரம் ரூபாயாக குறைந்தது. கடந்த சில நாட்களாக, டன்னுக்கு, 10 ஆயிரத்து 500 ரூபாயாக விலை அதிகரித்தது.இருப்பினும், கார்பன் உற்பத்திக்கான தொழிற்சாலைகளில், உற்பத்தி சீராகவில்லை. எனவே, கொப்பரை களங்களில், தேங்காய் சிரட்டைகள் விற்பனையாகாமல், தேங்கியுள்ளது. விரைவில், விற்பனை சீராகும் என்ற எதிர்பார்ப்பில், உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X