பொது செய்தி

தமிழ்நாடு

நிழற்கூரையை புதுப்பிக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 நிழற்கூரையை புதுப்பிக்க  கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ரோடு விரிவுபடுத்தும் போது, வலுவிழந்த நிழற்கூரையை புதுப்பிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி - வடக்கிபாளையம் ரோட்டில், கொங்கநாட்டான்புதுார் அமைந்துள்ளது. கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாததால், வடக்கிபாளையம் ரோட்டுக்கு வந்து, மக்கள் பஸ்சில் பயணிக்கின்றனர்.கடந்த, 2013 - 14ம் நிதி ஆண்டில், கொங்கநாட்டான்புதுார் பிரிவில், பயணிகள் வசதிக்காக, ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், நிழற்கூரை அமைக்கப்பட்டது.கடந்த ஆண்டு, பொள்ளாச்சி - நடுப்புணி ரோடு விரிவுபடுத்தப்பட்டபோது, நிழற்கூரை சேதமடைந்தது. பல இடங்களில் விரிசல் கண்டதால் வலுவிழந்த நிழற்கூரையை பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்தனர்.புதிதாக நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மழை, வெயிலில் மரத்தடியில் காத்திருக்கும் மக்களுக்கு உடனடியாக நிழற்கூரை அமைக்க வேண்டும் என, மக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X