சுத்திகரிக்கும் கழிவுநீரை குளத்துக்கு வழங்கணும்! நகராட்சி நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுத்திகரிக்கும் கழிவுநீரை குளத்துக்கு வழங்கணும்! நகராட்சி நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

Added : ஜூன் 24, 2020
Share

பொள்ளாச்சி:'நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்த பின், சுத்திகரிப்பு செய்யும் நீரை கிருஷ்ணா குளத்துக்கு வழங்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர்.சி.டி.சி., காலனி பொதுமக்கள் கொடுத்த மனு:பொள்ளாச்சி கோட்டூர் ரோடு சி.டி.சி., காலனியில், கருப்பராயன் கோவில் அருகே பாதாள சாக்கடை திட்டத்தின் பம்பிங் யூனிட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பம்பிங் யூனிட் அமைத்து, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, ஜோதிநகர் உள்ளிட்ட அனைத்து கழிவு நீரும் கொண்டு செல்ல வேலைகள் நடக்கிறது.கழிவுநீர் தொட்டி அமைத்தால், வரும் காலங்களில் இத்தொட்டியில் இருந்து வெளிவரும் விஷவாயுவால் உடல் நலக்கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.அருகில் உள்ள கிணற்று நீர் மாசுபட்டு உபயோகப்படுத்த இயலாத நிலை உருவாகும். இக்கிணற்றில் இருந்து தான் பத்ரகாளியம்மன் கோவில் வீதி, ஜோதிநகர் மற்றும் மாக்கினாம்பட்டி வரை கிணற்று நீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, மாற்று இடத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., சார்பில் கொடுத்த மனு:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர், கிருஷ்ணா குளத்துக்கு செல்கிறது. குளத்தின் நீர், ஜமீன் முத்துார் வழியாக ராமபட்டணம், பட்டிகவுண்டனுார், தாவளம் வரை, 15 கி.மீ.,க்கு நீரோடையாக சென்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தில், மாட்டுச்சந்தையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.சுத்திகரிக்கப்பட்ட நீர், கிருஷ்ணா குளத்தில் நிரப்புவதில்லை என்றும், மரப்பேட்டை வழியாக திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி செல்வதாக அரசு ஆணை வெளியிடப்பட்டதாக, விவசாயிகள் மத்தியில் பரவியுள்ளது.சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை, கிருஷ்ணா குளத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X