பொது செய்தி

தமிழ்நாடு

நாவல் பழத்துக்கு கூடியது மவுசு :வரத்து குறைவால் விலை உயர்வு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 நாவல் பழத்துக்கு கூடியது மவுசு :வரத்து குறைவால் விலை உயர்வு

உடுமலை:நாவல் பழம் சீசன் துவங்கியும், உடுமலை சுற்றுப்பகுதியில் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.நாவல் பழங்கள், இதயத்தை சீராக்குவதற்கும், பித்தத்தை தணிப்பது உட்பட பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சுவையிலும் தனித்து இருப்பதால் பலரும் விரும்பி உண்ணுகின்றனர். நாவல் மரங்கள் பரவலாக இருப்பினும், சீசன் இருக்கும் போதே, பழங்கள் அதிகம் காண முடிகிறது. மே முதல் நாவல் பழ சீசன் துவங்கியுள்ளது.ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, உடுமலை-பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இப்பழங்கள் தள்ளுவண்டிகளில் விற்பனை துவங்கியுள்ளன.ஆந்திராவிலிருந்து, உடுமலை சுற்றுப்பகுதியில் நாவல்பழங்களை சந்தைப்படுத்துகின்றனர். சீசன் துவங்கியிருந்தும், வரத்து குறைவாக இருப்பதால், விலை உயர்வுடன் விற்பனையாகிறது.ஒரு கிலோ, 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. வாடிக்கையாளர்களும் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X