பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் பணி துவக்கம்! ரூ.35.48 கோடியில் அமைகிறது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் பணி துவக்கம்!  ரூ.35.48 கோடியில் அமைகிறது

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 35.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 விசாரணை கூடங்கள், நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவற்றுடன், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்கப்படுகிறது.
நீண்ட இழுபறிக்கு பின், பணிகள் துவங்கியுள்ளன.பொள்ளாச்சியில், 50 ஆண்டுகளுக்கு முன் மாஜிஸ்திரேட் கோர்ட்டுடன் கூடிய, முன்சீப் கோர்ட் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சாராய வழக்குகளை விசாரிக்கும் ஜே.எம்., எண்:2 கோர்ட் துவங்கப்பட்டது.இரு கோர்ட்களிலும், பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்ததால், கடந்த, 2000ம் ஆண்டு, பொள்ளாச்சியில் சார்பு நீதிமன்றம் துவங்கியது.
கடந்த, 10 ஆண்டுகளில், பல்வேறு இடங்களில் செயல்பட்ட கோர்ட்கள், பொள்ளாச்சி தாசில்தார் அலுவலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், தாசில்தார், சப் - கலெக்டர் அலுவலகங்கள், கிளை சிறை, போலீஸ் ஸ்டேஷன் ஆகியன செயல்பட்ட வளாகத்தில், இரண்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள், முன்சீப் கோர்ட் மற்றும் சார்பு நீதிமன்றம் ஆகியனவும், வக்கீல்கள் கூட்ட அரங்கு, அரசு வக்கீல்கள் அறை ஆகியன போதிய இடவசதி இல்லாமல் செயல்படுகின்றன.
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் வக்கீல்கள், பொதுமக்கள் சார்பில், பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடப்பட்டது.கடந்த, 2015 - 16ம் ஆண்டில், அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க இடம் ஒதுக்கி, கட்டுமானப்பணிக்காக, 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்து அறிவித்தார்.
ஆனால், கோர்ட் அமைக்க தேர்வான சி.டி.சி., மேடு பகுதியில், 3.25 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தாமதம் ஆனது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், கோர்ட் வளாகம் அமைக்க, 3.12 ஏக்கர் நிலம் கிடைத்தது.கோவை மாவட்ட நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் இடத்தை பார்வையிட்டு, சென்னை ஐகோர்ட்டுக்கு தெரிவித்தனர்.கோர்ட் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நடைமுறைகளை தொடர்ந்து, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, 35.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. இதனால், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளது.
இதற்காக, பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள சி.டி.சி., மேடு பகுதியில், புதர் மற்றும் நகராட்சி கழிவுகள் அகற்றி சுத்தம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடக்கிறது.இப்பணி முடிவடைந்ததும், அடிக்கல் நாட்டு விழாவும், தொடர்ந்து கோர்ட் கட்டுமானப்பணியும் துவங்கவுள்ளது.ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், 10 கோர்ட்டுகளுக்கான விசாரணை கூடங்கள், நீதிபதிகள் அறை, அரசு வக்கீல்கள் அறை, போலீஸ் பாதுகாப்புடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காத்திருக்கும் அறை, வக்கீல்கள் கூட்டரங்கம், நீதிபதிகள் குடியிருப்பு, மேல்நிலை தொட்டிகள், குடிநீர் வசதி, பொது கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியன அமைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X