பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுப்பு: கண்காணிப்பு அவசியம்! அதிகாரிகளுக்கு சப் - கலெக்டர் அறிவுரை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 கொரோனா பரவல் தடுப்பு: கண்காணிப்பு அவசியம்! அதிகாரிகளுக்கு சப் - கலெக்டர் அறிவுரை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், என, சப் - கலெக்டர் அறிவுறுத்தினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார்கள் தணிகைவேல், வெங்கடாச்சலம், ராஜா, ஸ்ரீதேவி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், வைரம் முன்னிலை வகித்தனர். நகர்நல அலுவலர் மாணிக்கவேல் ராஜன், நகராட்சி, ஒன்றிய அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.சப் - கலெக்டர் வைத்திநாதன் பேசியதாவது:சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். போலீஸ், சுகாதாரத்துறை, வருவாய்துறையுடன், ஒன்றிய துணை பி.டி.ஓ.,க்கள் இணைந்து செயல்பட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வெளியே நடமாடுவதை தடுக்க கண்காணிப்பு அவசியமாகும். வெளிநாடு, வெளி மாவட்டங்களில் இருந்து வந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.நாச்சிமுத்து பிரசவ விடுதி மற்றும் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சந்தேகமாக உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. கழிப்பிடங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்; கிருமி நாசினி தெளிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு, 100 ரூபாயும்; சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால் கடைகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும். உழவர் சந்தையில் சமூக இடைவெளி பின்பற்றுவதை அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும். நடைபயணம் செல்பவருக்கு அபராதம் விதிக்கப்படும். உள்விளையாட்டு அரங்கம் இயங்க அனுமதிக்க வேண்டாம். பாஸ்ட்புட் கடைகளில் சுகாதாரம் குறித்து கண்காணிப்பு அவசியம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கிராம அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
நகரம் மற்றும் கிராமங்களில், மக்கள் அதிகளவு கூடும், 'ஹாட்ஸ்பாட்' இடங்களை அறிவிக்க வேண்டும். அபராதம் விதிக்கும் விபரங்கள் மாலை, 6:00 மணிக்குள் சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி நோய் பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, சப் - கலெக்டர் தெரிவித்தார்.நோடல் ஆபீசர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், ''அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில், கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X