பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவருக்கு அரசு உதவி நேரில் சென்றடைய எதிர்பார்ப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

உடுமலை:அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் உதவி தொகை மாணவர்களின் வீடுகளுக்கு, நேரடியாக சென்றடையும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.உடுமலை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, உலர் உணவு பொருட்கள் மற்றும் உணவு செலவின தொகை, அவரவர் அல்லது அவர்களது பெற்றோர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.கடந்த, மாதங்களில் வழங்கப்பட்ட, 500 ரூபாய் தொகையை, மாணவர்களின் தந்தையர் பலர், மது அருந்த பயன்படுத்துவதாக மாணவர்கள் சிலரே, வருத்தத்துடன் தெரிவித்தனர்.பொருளாதார நெருக்கடி நிறைந்த இக்காலகட்டத்தில், மத்திய அரசு வழங்கும் இந்த உதவி, ஆசிரியர்கள் அல்லது சத்துணவு அமைப்பாளர்கள் மூலம், மாணவ, மாணவியரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க, ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X