பொது செய்தி

தமிழ்நாடு

வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு, பொள்ளாச்சி சின்னநெகமத்தில், அஞ்சலி செலுத்தப்பட்டு, உறுதி மொழி ஏற்கப்பட்டது.இந்திய - சீன எல்லையில், தமிழக ராணுவ வீரர் உள்பட, 20 பேர் வீர மரணமடைந்தனர். இறந்த வீரர்களுக்கு நெகமம் அடுத்த, சின்னநெகமத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் தங்கராஜ், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கதிர், பா.ஜ., ஒன்றிய பொறுப்பாளர் மாணிக்கம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, மலரஞ்சலி செய்தனர்.தொடர்ந்து, பா.ஜ., ஆட்சியின் ஓராண்டு சாதனை குறித்த, புத்தகம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிறைவாக, 'இந்திய பொருள்களுக்கு ஆதரவு கொடுப்போம்; சீன பொருள்களை புறக்கணிப்போம்,' என, உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X