பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடுகளை மீறியதாக 5 பஸ்கள் மீது நடவடிக்கை

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கிணத்துக்கடவு:பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்களில் சமூக விலகலை கடைபிடிக்காமல் அதிகப்படியான பயணிகளை ஏற்றி செல்வதாக புகார் எழுந்தது.இதனை தொடர்ந்து, கிணத்துக்கடவு வருவாய் அலுவலர் ராமராஜ் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் மதுக்கண்ணன், விமல் மாதவன், முருகன் ஆகியோர், கோவில்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, கோவையில் இருந்து வந்த மூன்று தனியார் பஸ்கள் மற்றும் இரண்டு அரசு பஸ்களில் சமூக விலகல் இன்றி பயணிகள் நெருக்கமாக அமர்ந்து பயணித்தது தெரியவந்தது.மூன்று தனியார் பஸ்களுக்கும் சேர்ந்து, 3,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு அரசு பஸ்களின் டிரைவர் மற்றும் கன்டக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
28-ஜூன்-202012:19:31 IST Report Abuse
RADE முதலில் போதிய பேருந்து வசதி செய்யவும். உண்மையில் பொள்ளாச்சி அல்லது கோவையில் இருந்து கிளம்பும் பேருந்து தேவை ஆனா அளவு ஆட்களை தான் ஏற்றுகிறார்கள். நடுவில் இருக்கும் பிற ஊர்களில் பேருந்து நிற்பதும் இல்லை. 1 மணி நேரம் நின்றால் எதாவது ஒரு பேருந்து நிற்கும் அதில் எல்லோரும் வேறு வழி இன்றி ஏறி போக வேண்டி உள்ளது. கோவில்பாளையம் கிணத்துக்கடுவு ஒற்றைக்கால் மண்டபம் மாலுமிச்சம்பட்டி இருந்து ஏறுபவர்கள் நிற்பதற்கு அல்லது உட்காருவதற்கு போதிய இடம் இல்லை. ஆதலால் புகார் குடுத்தவர் பொள்ளாச்சி அல்லது கோவையில் இருந்து கிளம்பும் நபராக இருந்தால் இதை ஏற்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X