பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளத்துக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 மக்காச்சோளத்துக்கு நிலையான  விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

மடத்துக்குளம்:மக்காச் சோளத்துக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் முக்கிய சாகுபடியாக உள்ளது. குறைவான பாசன நீரிலும் வளர்ந்து விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது. ஆண்டு தோறும், 600 ஏக்கர் பரப்பில் சாகுபடி நடக்கிறது. அறுவடை தொடங்கும் போது, 100 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை, 1,700 முதல் 1,850 ரூபாய் வரையும், அதற்குப்பின் சில வாரங்கள் கடந்த நிலையில் 1,000 முதல் 1,200 ரூபாய் வரையும், கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், இது உரிய விலை அல்ல எனவும், விலை உயர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'ஒரு ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்ய, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அறுவடையின் போது, 20 முதல் 25 மூட்டைகள் தான் கிடைக்கிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விலையின்படி கணக்கீடு செய்தால், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பது இல்லை. சில விளை நிலங்களில் குறைவான சாகுபடி கிடைக்கும் போது, நஷ்டம் ஏற்படுகிறது. இதற்குத்தீர்வாக, 100 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு, 3,000 ரூபாய் நிலையான கொள்முதல் விலையாக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X