பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப்பொருளான கோபுர விளக்குகள்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 காட்சிப்பொருளான கோபுர விளக்குகள்

உடுமலை:உடுமலை நகரிலுள்ள முக்கிய சந்திப்புகளில், உயர் மின் கோபுர விளக்குகள் உரிய பராமரிப்பு இல்லாமல், காட்சிப்பொருளாக மாறி வருகின்றன.உடுமலை நகராட்சியில், நகர வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில், 3,451 தெருவிளக்குகள் உள்ளன.இதே போல், பழைய பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், தளி ரோடு மேம்பாலம் உட்பட இடங்களில், உயர் மின் கோபுர விளக்குகள், பல்வேறு திட்டங்களின் அமைக்கப்பட்ட, இவ்விளக்குகள், நகராட்சியால், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், 70 விளக்குகள் கொண்ட உயர் மின் கோபுரத்தில், ஒவ்வொரு விளக்காக செயல் இழந்து, பின்னர், அப்பகுதி முழுவதும் இருட்டில் மூழ்குகிறது.பழைய பஸ் ஸ்டாண்ட் சந்திப்பிலுள்ள, உயர் மின் கோபுர விளக்கு பழுதடைந்து பல வாரங்களாகியும், சீராக்கப்படவில்லை. பஸ் ஸ்டாண்டிலும், இதே நிலையே காணப்படுகிறது. ரோடு சந்திப்பு பகுதிகளில் அமைந்துள்ள இவ்விளக்குகள் காட்சிப்பொருளாக மாறியுள்ளதால், விபத்துகள் ஏற்படுவதுடன், குற்றச்சம்பவங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகம் உயர் மின் கோபுர விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X