பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக திட்ட அலுவலர் களஆய்வு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 ஊரக திட்ட அலுவலர் களஆய்வு

கிணத்துக்கடவு:கோவை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊராட்சிகளில், கொரோனா பரவதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வாகனம் மூலம் பிரசாரம், கிருமி நாசினி தெளிப்பு, முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்நிலையில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரமேஷ்குமார், கோவில்பாளையம் ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொண்டார்.துாய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் வந்தோருக்கு அறிவுரை வழங்கினார்.கடைகளில், ஐந்து பேருக்கு மேல் இருக்க கூடாது, முகக்கவசம் அணியாமல் வருபவர்களை கடைக்குள் அனுமதிக்கூடாது. கடைகள் முன் சமூக விலகல் கட்டங்கள் வரைய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். உதவி திட்ட அலுவலர் முருகேசன், ஒன்றியக்குழுத் தலைவர் நாகராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தைசாமி, சாய்ராஜ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X