தமிழ்நாடு

முழு ஊரடங்கு அமல்:தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 358

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 358ஐ எட்டியது. தினமும் 15 முதல் 60 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். சமூக பரவலாகும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க நேற்று மாலை தேனி கலெக்டர், சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அவர் கூறியதாவது:, கொரோனா பரவுவதை தடுக்க இன்று மாலை 6:00 மணி முதல் தேனி, போடி, கம்பம் சின்னமனுார், கூடலுார் நகராட்சி பகுதி களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.டீ, பேக்கரி, கடைகளுக்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய பொருட்கள், வங்கி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், காஸ், காய்கறி, பழம், மளிகைக்கடைகள் விற்பனை செய்ய காலை 6:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு.

ஓட்டல்களில் காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையும், பகல் 12:00 மணி முதல் 2:00 மணி வரையும், இரவு 7:00 முதல் 9:00 மணி வரை பார்சல் வழங்க அனுமதி. மருத்துவ அவசரத்திற்கு கார், ஆட்டோ, டூவீலரில் செல்ல அனுமதிக்கப்படும். ரேஷன் கடைகள் காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை இயங்கும். தொழிற்சாலைகளில் அரசின் வழிகாட்டுதல்படி தொழிலாளர்கள் தங்கி பணி செய்யலாம்.

அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். தேனியில் இருந்து மதுரைக்கு பஸ் இயங்காது. கம்பம்- பழநி, கம்பம்- திண்டுக்கல் மார்க்கத்தில் தற்போது இயங்கும் பஸ் எண்ணிக்கையில் 50 சதவீத அளவு இயங்கும். கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி, ஜூன் 24கொரோனா பரவலை தடுக்க தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6:00 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மறு உத்தரவு வரை தொடரும் என கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X