பாதாள சாக்கடை பணியால் குழாய் உடைப்பு: இருநாட்களுக்கு குடிநீர் வினியோகம் 'கட்'

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 பாதாள சாக்கடை பணியால் குழாய் உடைப்பு: இருநாட்களுக்கு குடிநீர் வினியோகம் 'கட்'

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை பணியின் போது, பிரதான குழாய் உடைந்து குடிநீர் வீணானது. சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபடும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. பணிகளின் போது, குடிநீர் குழாய் உடைப்பு தொடர்கதையாகியுள்ளது.இந்நிலையில், பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகளின் போது, குழாய் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், தண்ணீர் ஊற்று போல பொங்கி வேகமாக ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், உடனடியாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தினர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது, பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி மகாலிங்கபுரம், வெங்கடேசா காலனி, கே.ஆர்.ஜி.,பி., நகர், சுதர்சன் நகர், கே.சி., பார்க், சோமசுந்தரம் லே - அவுட் பகுதிகளில் உள்ள மேல்நிலைத்தொட்டிக்கு, குடிநீர் கொண்டு செல்லும பிரதான குழாய், மார்க்கெட் ரோடு வழியாக செல்கிறது.இந்த குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க, கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் இப்பகுதியில் செல்வது குறித்தும் பாதாள சாக்கடை திட்ட பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.ஆனால், பணிகள் மேற்கொள்ளும் போது, குழாய் பதிக்கப்பட்டுள்ள பகுதியில், ஹிட்டாச்சியை கொண்டு குழி தோண்டியுள்ளனர். இதனால், உடைப்பு ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே அறிவுறுத்தியும் குழாயினை உடைத்துள்ளனர். சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பணிகள் முடிந்ததும் எவ்வளவு தொகை செலவாகிறதோ, அந்த தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.இப்பணிகள் முடிய இரண்டு நாட்களாகும் என்பதால், நகரப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கும். பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாக காய்ச்சி குடிக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.அறிவுறுத்த வேண்டும்!பொள்ளாச்சி நகரப்பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் கவனமின்றி மேற்கொள்வதால், பிரதான குழாய் மற்றும் வீடுகளுக்கு செல்லும் குழாய் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய கண்காணிப்பு செய்ய வேண்டும். குழாய் செல்லும் பகுதியில் கவனமுடன் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X