குப்பைக்கிடங்கில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பைக்கிடங்கில் தீ விபத்து

Added : ஜூன் 24, 2020
Share
 குப்பைக்கிடங்கில் தீ விபத்து

உடுமலை:உடுமலை அருகே குப்பை கிடங்கில், பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.உடுமலை பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி காலனி அருகில், நகராட்சி பழைய குப்பை கிடங்கு இருந்தது. தற்போதும், அப்பகுதியில், குப்பை அகற்றப்படாமல், உள்ளது.நேற்று காலை, குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்து, காற்றுக்கு வேகமாக பரவியது. தகவல் கிடைத்த, உடுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. பற்றி எரிந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரிய பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X