கொசு பெருக்கத்தால் அவதி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதிகளில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளிலும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, உடுமலை சுற்றுப்பகுதியிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவாமல் தடுப்பதற்கு, மற்ற பகுதிகளிலிருந்து வந்துள்ளவர்களின் வீடுகளை தனிமைப்படுத்துதல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மாலை நேரங்களில் நகர வீதிகளில், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குடியிருப்புகளில் மட்டுமின்றி வணிக வீதிகளிலும், இதன் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம், அனைத்து பகுதிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் மாலை நேரங்களில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X