கூட்டம் கூட்டினால் கடைகளுக்கு சீல் :ஊராட்சிகள் உதவி இயக்குனர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டம் கூட்டினால் கடைகளுக்கு 'சீல்' :ஊராட்சிகள் உதவி இயக்குனர் உத்தரவு

Added : ஜூன் 24, 2020
Share
ஆனைமலை:'கூட்டமாக இருக்கும் கடைகளுக்கு உடனடியாக, பத்தாயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதித்து, 'சீல்' வைக்க வேண்டும்,' என, மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று, கோவை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாதேவி தலைமையில், ஆலோசனைக்கூட்டம் நடந்தது.ஆனைமலை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், லதா

ஆனைமலை:'கூட்டமாக இருக்கும் கடைகளுக்கு உடனடியாக, பத்தாயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதித்து, 'சீல்' வைக்க வேண்டும்,' என, மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று, கோவை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாதேவி தலைமையில், ஆலோசனைக்கூட்டம் நடந்தது.ஆனைமலை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், லதா மற்றும், ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்றனர்.மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாதேவி பேசியதாவது:ஊராட்சிகளில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்து, கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். ஊராட்சி அதிகாரிகள், பிரதிநிதிகள், வீடுகள், கடைகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.கடைகளில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகளில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும். சிறு வணிக கடைகள், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் என அனைத்து வணிக நிறுவனங்களிலும் ரெய்டு செல்ல வேண்டும்.கூட்டமாக இருக்கும் கடைகளுக்கு, பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து, உடனடியாக, 'சீல்' வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு, நுாறு ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். விதிமுறை மீறுவோர் மீது, போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X