ஆனைமலை ஏலத்துக்கு கொப்பரை வரத்து குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை ஏலத்துக்கு கொப்பரை வரத்து குறைவு

Added : ஜூன் 24, 2020
Share

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து குறைந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடத்தப்பட்டது.முதல் தர கொப்பரை, 244 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 91.10 முதல், 97.20 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 193 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 61.50 முதல், 78.50 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், 437 கொப்பரை மூட்டைகளை, 105 விவசாயிகள் கொண்டு வந்தனர்; 11 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை கிலோவுக்கு, 70 பைசா அதிகரித்தது. மழையால் கொப்பரையை உலர வைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், வரத்து குறைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X