சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்று சந்தேக நபர்களைஒப்படைத்த கிராம மக்கள்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

வடமதுரை:தொற்று உள்ளவருடன் பழகியவர்களை கிராம மக்களே தனிமை மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வடமதுரை பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த 28 வயது வாலிபர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்தார். சென்னையில் அதிகரித்துள்ள வைரஸ் பிரச்னையால் அங்கிருந்து இருசக்கர வாகனத்திலேயே கிராமத்திற்கு திரும்பினார்.கிராமத்தில் சாதாரணமாக உலா வந்த அவரை சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்காக தனிமை மையத்தில் சேர்த்தனர். பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதையடுத்து பெருமாள்கோவில்பட்டியில் தொற்று வாலிபருடன் பழகிய நபர்கள் குறித்து பொதுமக்களே விசாரணை நடத்தி 11 பேரை அடையாளம் கண்டறிந்தனர்.இவர்கள் அனைவரும் தற்போது சுகாதாரத்துறையினரின் தனிமை மையத்தில் பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிராம மக்களே விழிப்புணர்வுடன் சந்தேக நபர்களை கண்டறிந்து ஒப்படைத்ததால் தொற்று பரவல் வாய்ப்பு குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X