பெயர் மாற்றம் செய்த சொத்து ரத்து: தீர்ப்பாய தலைவர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெயர் மாற்றம் செய்த சொத்து ரத்து: தீர்ப்பாய தலைவர் உத்தரவு

Added : ஜூன் 24, 2020
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பேரன் பெயருக்கு மாற்றப்பட்ட நிலம் மீண்டும் தாத்தா பெயருக்கு மாற்றம் செய்து, சப் - கலெக்டர் உத்தரவிட்டார்.பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி நஞ்சேவுகண்டன்புதுாரை சேர்ந்தவர் நஞ்சப்பன் என்கிற கிருஷ்ணசாமி. இவருக்கு, மகன், மகள் உள்ளனர்.இவர் கொடுத்த புகார் மனு அடிப்படையில், பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு தீர்ப்பாயம் தலைவரான,

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பேரன் பெயருக்கு மாற்றப்பட்ட நிலம் மீண்டும் தாத்தா பெயருக்கு மாற்றம் செய்து, சப் - கலெக்டர் உத்தரவிட்டார்.பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி நஞ்சேவுகண்டன்புதுாரை சேர்ந்தவர் நஞ்சப்பன் என்கிற கிருஷ்ணசாமி. இவருக்கு, மகன், மகள் உள்ளனர்.இவர் கொடுத்த புகார் மனு அடிப்படையில், பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு தீர்ப்பாயம் தலைவரான, சப் - கலெக்டர் வைத்திநாதன் விசாரணை மேற்கொண்டார். சப் - கலெக்டர் கூறியதாவது:பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கிருஷ்ணசாமியிடம் இருந்து, மகன் சுகுமார், பேரன் பெயருக்கு, முழு சொத்தையும் (3.38 ஏக்கர்) தான செட்டில்மென்ட் பெற்றுள்ளார்.இது குறித்து, மனைவி, மகளிடம் தெரிவித்து மகனிடம் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய கோரியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து, அவர் மீண்டும் தனது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்தார்.பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் அவரது பிள்ளைகள் மற்றும் வாரிசுகளுக்கு தானமாகவோ வேறு வழிகளிலோ சொத்துக்களை உரிமை மாற்றம் செய்த பின், சொத்துக்களை பெற்றவர்கள், வயதானவர்களை பராமரிக்க தவறினால், சொத்து உரிமை மாற்றத்தை ரத்து செய்யவும்; மீண்டும் அந்த சொத்துகளுக்கு உரிமை பெற்றிடவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. அதன் அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரவு பதிவு செல்லதக்க ஆவணமாக கருத இயலாது; எனவே பத்திரத்தை ரத்து செய்து, வில்லங்கத்தினை பதிவேற்றம் செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது.மேல் முறையீடுகள் இருப்பின், இவ்வாணை கிடைக்கப்பெற்ற, 60 நாட்களுக்குள் மேல்முறையீடு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X