பொது செய்தி

தமிழ்நாடு

டிரைவர்களுக்கு கபசுர குடிநீர்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கூடலுார்:நீலகிரிக்கு வரும் வாகன டிரைவர்களுக்கு, மாநில எல்லையில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.கூடலுார் வழியாக, கர்நாடகா, கேரளா இடையே அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், டிரைவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மாநில எல்லையான கக்கனல்லா, நாடுகாணி உள்ளிட்ட நுழைவுவாயில் பகுதிகளில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இலவச கபசுர குடிநீர் வழங்கும் பணி நேற்று, துவங்கியது.இதனை, கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் துவக்கி வைத்தார். தாசில்தார் தினேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X