தமிழ்நாடு

நன்செய் நிலங்கள் புன்செய் நிலமானதேன் ஒட்டன்சத்திரம் விவசாயிகள் ஆதங்கம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 நன்செய் நிலங்கள் புன்செய் நிலமானதேன் ஒட்டன்சத்திரம் விவசாயிகள் ஆதங்கம்

ஒட்டன்சத்திரம்:பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால், இப்பகுதியில் உள்ள 6 பெரிய குளங்கள் மற்றும் பல சிறிய குளங்கள் நீர்வரத்தின்றி காய்ந்து போனதுடன், நன்செய் நிலங்கள் புன்செய்நிலங்களாக மாறிவருகின்றன.

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெருமாள்குளம், சடையன்குளம், முத்துசமுத்திரம் குளம், செங்குளம், ராமசமுத்திரம் கண்மாய், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகியவை குறுநில மன்னர்களால் கட்டப்பட்டு 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாசன வசதியை பெற்று வந்தது.

இப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு, நெல் உள்ளிட்ட நன்செய் பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் சில ஆண்டுகளாக புன்செய் பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வருகிறது.பருவமழை நன்றாக பெய்து பரப்பலாறு அணை நிரம்பினால் மட்டுமே மேற்சொன்ன குளங்களுக்கு நீர்வரத்து ஏற்படும்.

ஆனால் பருவமழை தொடர்ந்து சரிவர பெய்யாததால் பரப்பலாறு அணை தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே உள்ளதாக கூறி பாசனத்திற்கு திறந்து விட மறுத்து விடுகின்றனர். இதனால் குளங்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் ஆயிரத்து 500 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. குளங்களின் அருகில் உள்ள தென்னை மரங்கள் கூட போதிய நீரின்றி காயத் தொடங்கி விட்டன.

ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அப்பகுதி பாசனத்திற்காக கட்டப்பட்ட அணை நாளடைவில் குடிநீருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மாறிவிட்டது. அணையில் தற்போது 71 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் இதில் பாதி அளவுக்கு சேறும் சகதியும்தான் உள்ளது. அணை கட்டப்பட்டது முதல் இன்றுவரை துார்வாரப்படவில்லை.

வானம் பார்த்த பூமியாகிவிட்டதேதங்கச்சியம்மா பட்டி விவசாயி கிருஷ்ணசாமி: ஒட்டன்சத்திரத்திற்கு பரப்பலாறு அணை மட்டுமே குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் கிடைக்கிறது. தோட்டத்தில் 1,500 அடி வரை போர் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீரை விலைக்கு வாங்கியே தென்னை மரங்களை காப்பாற்றுகிறேன். நன்செய் நிலம் அனைத்தும் வானம் பார்த்த பூமியாகி விட்டது.

பரப்பலாறு அணை தண்ணீரை பாசனத்திற்கு மட்டும் பயன்படுத்தினால் விவசாயம் செழிக்கும். குளங்களை நிரப்ப வேண்டும்விவசாயி வஞ்சிமுத்து:இப்பகுதியில் சம்பா, குறுவை சாகுபடி செய்யப்பட்டது நினைவில் இருக்கிறது. தற்போது நிலங்கள் காய்ந்துவிட்டன. பரப்பலாறு அணையில் இருந்து உபரி நீரை திறந்துவிடுவதற்கு பதில், மழைக்காலத்தில் அணையை திறந்துவிட்டு, குளங்கள் அனைத்தும் நிரம்பிய பிறகு, அணைக்கு வரும் உபரி நீரை தேக்கி வைத்து குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும்.

பாசனத்திற்கு தண்ணீர் திறக்க பலமுறை தெரிவித்தும் பயனில்லை. நிலத்தடி நீர்மட்டம் உயர அணையில் தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X