பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆய்வு கூட்டத்தில் முடிவு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 கட்டுப்பாடுகளை அதிகரிக்க  ஆய்வு கூட்டத்தில் முடிவு

குன்னுார்:நீலகிரி கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹு தலைமையில், கொரோனா தடுப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பான சிறப்பு உயர் மட்ட அதிகாரிகள் ஆய்வு கூட்டம், குன்னுார் 'இன்கோ' சர்வில், நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தார். அதில், 'நீலகிரியில், கடந்த, 5 நாட்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களில், 30ம் தேதி வரை 'மீட்டிங்' நடத்தி, புதிய நபர்கள் வருவது குறித்து தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நீலகிரியில் உள்ள, 13 சோதனை சாவடிகளில், கேரள எல்லையில், 3, கெத்தையில் உள்ள சோதனைச்சாவடிகள் பூட்டப்பட்டன. இதன்பின், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அத்தியாவசிய பணிக்கு மட்டுமே மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, முடிவு எடுக்கப்பட்டது. பின், மேல் வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆய்வு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X