பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையை தாக்கும் 'காண்டாமிருக வண்டு'

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 தென்னையை தாக்கும் 'காண்டாமிருக வண்டு'

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

திண்டுக்கல்லில் அதிகளவில் தென்னை சாகுபடியாகிறது. தென்னையில் ஜூன் முதல் செப்டம்பர் வரை 'காண்டாமிருக வண்டு' தாக்குதல் இருக்கும். இவ்வண்டுகள் தென்னையின் குருத்துப்பாகத்தில் துளையிட்டு மொட்டுப்பகுதியை உண்ணும். இவை தாக்கினால் 15 சதவீதம் மகசூல் குறையும்.துவக்கதிலேயே வண்டின் தாக்குதலை தடுத்தால் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். வண்டு தாக்கிய மரத்தை அகற்றி அழிக்க வேண்டும்.

உரக்குழியில் இருந்து வண்டின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப் புழுக்களை அழிக்க வேண்டும். விளக்கு பொறிகளை தோப்புக்குள் வைத்து வண்டுகளை கவர்ந்தும் அழிக்கலாம்.ஆமணக்கு புண்ணாக்கு ஒரு கிலோ, ஒரு கரண்டி புளித்த மாவை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து மண் கலையத்தினுள் ஊற்றி ஏக்கருக்கு 5 இடங்களில் வைத்தும் வண்டை கவர்ந்து அழிக்கலாம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X