பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுடன் இன்று முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
covid 19, coronavirus, chennai news, tamil nadu, Chief Minister Edappadi K Palaniswami, lockdown extension, chennai coronavirus,

சென்னை, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., இன்று மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகம் முழுதும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது.

எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, நோய் பரவல் அதிகம் உள்ள, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், வாகன போக்குவரத்துக்கும், கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க, 19ம் தேதியில் இருந்து, வரும், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நேற்று முதல், மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட, பல மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. எனவே, அந்த மாவட்ட நிர்வாகங்களும், முழு ஊரடங்கு அறிவிக்கும்படி, அரசிடம் கோரியுள்ளன.இந்த சூழ்நிலையில், இன்று காலை, 10:00 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்த உள்ளார்.இக்கூட்டத்தில், தலைமை செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், தற்போது கொரோனா நோய் பரவல் நிலை, பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளன.


முதல்வர் நாளை கோவை பயணம்!



முதல்வர், இ.பி.எஸ்., நாளை கோவை செல்கிறார். நாளை காலை, 10:00 மணிக்கு, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா நோய் தடுப்பு பணிகள், அத்திக்கடவு -- அவினாசி நீரேற்றும் திட்டப் பணிகள் குறித்து, முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். பின், அத்திக்கடவு- - அவினாசி நீரேற்றும் திட்ட பணிகளை, நேரில் கள ஆய்வு செய்ய உள்ளார்.

நாளை மறுதினம், 26ம் தேதி திருச்சி செல்கிறார். அங்கு காலை, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும், வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா நோய் தடுப்பு பணிகள், முக்கொம்பு கதவணை கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்கிறார். அதன்பின், காவிரி ஆற்றின் குறுக்கே, முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை, நேரில் பார்வையிடுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayakumar - kanchipuram,இந்தியா
24-ஜூன்-202010:12:35 IST Report Abuse
Vijayakumar காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்பேட்டைகள் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை இயக்க சென்னையில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை வரவைக்கிறார்கள் அரசு இதனை கண்டு கொள்வதே இல்லை. இது எப்படி லாக் டவுன் என்று சொல்ல முடியும் ? கொரோனா தொற்று இதன் மூலமாகவும் அதிகம் பரவுகிறது. தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லாக் டவுன் விடுப்பு மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தினால் தான் நோய் தொற்று குறையும். அரசாங்கம் சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால் இத்தனை நாள் உழைப்பு வீணாகிவிடும்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூன்-202008:30:47 IST Report Abuse
Chandramoulli முழு ஊரடங்கு உடன் தேவை தமிழகத்திற்கு . நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கை சரியான வழியில் செல்கிறது , மக்கள் பூரண ஒத்துழைப்பு கொடுப்பதில்லை . மிகவும் வருந்தத்தக்க செயல், எல்லாம் வேண்டும் என்றே திட்டமிட்ட மதவாத , பிரிவினைவாத உருப்படாத கும்பல்கள்
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
24-ஜூன்-202007:18:31 IST Report Abuse
Paramasivam கொரோனாவை ஒன்றினைந்து பரப்புவதை ஒரு கட்சி செயல்படுத்தி விட்டது. இதற்கான விலையை அக்கட்சி பெற்று வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X