பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பொலிவு பெறும் கலெக்டர் அலுவலகம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 புதுப்பொலிவு பெறும் கலெக்டர் அலுவலகம்

திண்டுக்கல்:சுவரோவியங்கள், வண்ணம் பூசுவதன் மூலம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டி 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. கட்டங்கள், அறைகள் சிதிலமடையும் போது மட்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது கலெக்டர் அலுவலகம் முழுவதும் சிதிலமடைந்த கட்டடங்கள், அறைகள் சீரமைக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு வருகிறது. வரவேற்பு அறை, குறைதீர் முகாமிற்கு வருவோர் காத்திருக்கும் அறை அமைக்கும் பணிகள் நடக்கிறது.

மேலும் கூட்ட அரங்கிற்கு செல்லும் வழியில் திண்டுக்கல்லின் சிறப்பை விளக்கும் பூட்டு, மலைக்கோட்டை, பழநி, கொடைக்கானல் பற்றிய சுவரோவியங்கள் வரையப்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வெளியே பல வகை பூக்கள் நிறைந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கலெக்டர் அலுவலகம் மீண்டும் பொலிவு பெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X