பொது செய்தி

தமிழ்நாடு

பரிசோதனை அதிகரிப்பு ஏன்? சுகாதார செயலர் விளக்கம்

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
IAS officer J Radhakrishnan, chennai news, coronavirus, covid 19, corona, coronavirus tamil nadu, health secretary

சென்னை,: ''கொரோனா பரவலை விரைவாக கட்டுப்படுத்தவே, அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, திரு.வி.நகரில் அமைந்துள்ள மருத்துவ முகாமை ஆய்வு செய்த, அவர் கூறியதாவது:

முழு ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, 30 நிரந்தர பரிசோதனை மையங்கள், 10 நடமாடும் சோதனை மையங்கள் வாயிலாக, அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முன்கூட்டியே கண்டறிந்து, நோய் பரவலை கட்டுப்படுத்தவே, அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.மேலும், பிற மாவட்டங்களில், தீவிர பரிசோதனைக்கு பின், மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், 'இ - பாஸ்' வழங்குவது கூட கட்டுப்படுத்தப்பட்டு, அவசர தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.


latest tamil news




தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஜய் யாதவ் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிகமான கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது, '104' என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்கும்.
நோய் தொற்று அதிகரிக்காமல் தடுக்க, சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும், பரிசோதனையை அதிகரிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை் செயலர் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
24-ஜூன்-202011:32:19 IST Report Abuse
R. Vidya Sagar இந்த டயலாக்தான் ரொம்ப நாலா ஓடிட்டு இருக்கு.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-ஜூன்-202008:52:28 IST Report Abuse
vbs manian தனியார் துறையில் நிறைய பேருக்கு வேலை போய் விட்டது. சாலையோர வியாபாரம் செய்பவர்களுக்கு எல்லாம் போய் விட்டது.. வயிற்று பசி அடங்க அவர்கள் வெளியில் வந்தே ஆக வேண்டும் தோற்று பரவத்தான் செய்யும்.
Rate this:
24-ஜூன்-202013:00:27 IST Report Abuse
வெற்றி கொண்டான்  ::  தமிழன்இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8. 5% ஆக குறைந்தது' என்ன சார் நீங்கள் சொல்லுவதற்கு மோடியின் புள்ளி விவரங்களுக்கு நிறய மாறுபாடு...
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூன்-202008:27:41 IST Report Abuse
Chandramoulli தமிழக அரசின் இந்த முறை ஆரம்பம் முதல் சரியான பாதையில் செல்கிறது . இந்தியாவில் தமிழகம் தான் அதிக அளவில் டெஸ்ட் செய்கிறது . மக்கள் ஒத்துழைப்பு தருவது இல்லை . சென்னை மக்கள் யாருக்கும் மதிப்பு கொடுப்பது இல்லை .அரசின் எந்த அறிவுரையையும் கேட்கும் மனநிலையில் இல்லை . திரு . ராதாகிருஷ்ணன் அவர்களே முதலில் நீங்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் . உங்களின் செயல் மிகவும் போற்றக்கூடியது . வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X