சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : புனித அந்தோணியார் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

விழுப்புரம் அடுத்த ஆற்காட்டை சேர்ந்த சகாய ஜெயசீலன் தலைமையில் கொடுத்துள்ள மனு;எங்கள் கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக புனித அந்தோணியார் சிற்றாலயம் உள்ளது. இந்த சிற்றாலயத்தில் கடந்த 17ம் தேதி மர்மநபர்கள் உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச்சென்றனர்.இதை தொடர்ந்து, கடந்த 19ம் தேதி புனித அந்தோணியார் சிலை தலை உடைக்கப் பட்டு சேதப்படுத்தப்பட்டது.இச்சம்பவங்கள் குறித்து அரகண்டநல்லுார் போலீசில் புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு டாஸ்மாக் கடை அருகில் அங்கன்வாடி மையம், அரசு ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் பள்ளி மாணவர்களின் விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது.எனவே, புனித அந்தோணியார் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், டாஸ்மாக் கடையை அகற்றவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X