பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர்கள் குழுவிற்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : அண்ணாகிராமம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பாக கூட்டு பண்ணைய திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாகிராமம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பாக கூட்டு பண்ணைய திட்டத்தில் 20 பேர் கொண்ட விவசாய ஆர்வலர் குழு துவக்கினர்.இதே போல் 5 குழு உள்ளடக்கிய 100 சிறுகுறு விவசாயிகள் கொண்ட 7 உழவர்

நெல்லிக்குப்பம் : அண்ணாகிராமம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பாக கூட்டு பண்ணைய திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அண்ணாகிராமம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பாக கூட்டு பண்ணைய திட்டத்தில் 20 பேர் கொண்ட விவசாய ஆர்வலர் குழு துவக்கினர்.இதே போல் 5 குழு உள்ளடக்கிய 100 சிறுகுறு விவசாயிகள் கொண்ட 7 உழவர் உற்பத்தியாளர் குழு துவங்கப்பட்டது.இக்குழுவிற்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கிட ரூ.5 லட்சம் சுழல் நிதியாக வழங்கபட்டது. மீதி தொகை விவசாயிகளிடம் பங்கு தொகையாக பெறப்பட்டு தேவையான இயந்திரங்கள் வாங்கப்பட்டன.இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு விவசாயிகளிடம் வழங்கினர்.

வேளாண்மை அலுவலர் தேன்மொழி உதவி அலுவலர்கள் பாஸ்கர்ராஜ், ராமதாஸ், திருவேங்கடம், பிரகாஷ், ரஞ்சனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X