சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரணம் வழங்கல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
செஞ்சி : அம்மாகுளம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு தி.மு.க., சார்பில் நிவாரணத்தை எம்.எல்.ஏ., டாக்டர் மாசிலாமணி வழங்கினார். செஞ்சி அடுத்த அம்மாகுளம் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு மத்தியில் அகிலா 37, என்பவரின் கூரை வீடு உள்ளது.நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் அகிலா கிராமத்தில் உள்ள கடைக்கு வந்திருந்தார். திரும்பிச் சென்றபோது வீடு

செஞ்சி : அம்மாகுளம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு தி.மு.க., சார்பில் நிவாரணத்தை எம்.எல்.ஏ., டாக்டர் மாசிலாமணி வழங்கினார்.
செஞ்சி அடுத்த அம்மாகுளம் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு மத்தியில் அகிலா 37, என்பவரின் கூரை வீடு உள்ளது.நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் அகிலா கிராமத்தில் உள்ள கடைக்கு வந்திருந்தார். திரும்பிச் சென்றபோது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சம்பவ இடத்திற்கு செஞ்சி தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் உடனே அணைக்க முடியவில்லை. இதற்குள் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் தீ அதிகமாக பரவியதில் பீரோவில் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 2 சவரன் தங்க நகை, துணி, கிரைண்டர், மிக்ஸி, டி.வி., என 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

அகிலாவின் குடும்பத்திற்கு தி.மு.க., சார்பில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., டாக்டர் மாசிலாமணி, அரிசி, துணி, பாத்திரம், பாய், தலையனை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X