நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கத்தில் பிரசவித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியானதால், மற்ற கர்ப்பிணிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், குழந்தையடன் கடலுார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். மருத்துவமனையை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்தனர். ஆனால் பயந்த மக்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியை மூடினர்.வட்டார மருத்துவ அலுவலர் வசந்த் கூறுகையில், வளாகம் முழுவதையும் சுத்தம் செய்துள்ளோம். மக்கள் அச்சபட வேண்டாம்.
வரும் நோயாளிகளுக்கு மாத்திரைகள் மட்டும் வழங்குகிறோம் ஊசி போடுவதில்லை. இங்கு பிரசவத்துக்கு வரும் பெண்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறோம் என்றார். மேலும் அங்கு பணி புரியும் டாக்டர்கள், செவிலியர்களுக்கும் பரிசோதனை செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE