சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மணல் குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் மற்றும் அண்டராயநல்லுார் கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இதையெடுத்து, திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், பா.ஜ., தி.மு.க., பா.ம.க., அ.ம.மு.க., இந்திய.கம்யூ., வி.சி., , உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதில் ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் கட்சி நிர்வாகிகளிடம் கூறுகையில்: இது அரசு மணல் குவாரி இதனை தடுத்து நிறுத்த முடியாது, பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் மணல் குவாரிக்கு முழு தர சான்றிதழ் பெற்று துவங்கப் பட்டுள்ளது எனக் கூறினார். கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளிடம் பேசுகையில்: தனியார் குவாரி, , அரசு குவாரியாக இருந்தாலும் பாதிப்பு ஒன்றுதான். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த பகுதியில் ஏற்கனவே 60 சதவீதம் விவசாயம் பாதித்துள்ளது.

மீண்டும் குவாரி அமைத்தால் 2400 ஏக்கர் விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு அழிந்து விடும் என கூறினர். மேலும் குவாரி அமைத்தால் தூத்துக்குடி சம்பவம் போல் நடக்கும் என்றனர். இதனால் அதிகாரிகளுக்கும் கட்சி பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் போட்டப்படி அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.இதனால் அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.

மேலும் இன்று திட்டமிட்ட படி அனைத்து கட்சி சார்பிலும், ஊர் பொதுமக்கள் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினர். ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், திருவெண்ணெய் நல்லுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், சிறப்புகாவலர் சக்திவேல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X