சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர் கைது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புவனகிரி: புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கீரப்பாளயைம் பஸ் நிறுத்தம் அருகில் டி.என்.18.எச்.2097 பதிவெண் கொண்ட பைக்கில் 6 மூட்டைகளில் ஆற்று மணல் கடத்திய, கீரப்பாளையம் மேட்டுத்தெரு சிவக்குமார் மகன் ஆனந்தராஜ், 23; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பைக் மற்றும் மணலை பறிமுதல் செய்தனர்.வயிற்று வலி: வாலிபர் தற்கொலைபுவனகிரி: புவனகிரி தாலுகா மருதுார் அருகே உளுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் மகன் மணிமாறன், 25; வேலைக்கு செல்லாத இவருக்கு திருமணமாகவில்லை. அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார். கடந்த 17 ம் தேதி வயிற்று வலி அதிகமானதால், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

அவரை சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைதுகடலுார்: பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி மற்றும் போலீசார் கடந்த 6ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, லிங்காரெட்டிபாளையத்தில் வீட்டின் பின்புறம் 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த குப்புசாமி, 56, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது பண்ருட்டி காவல் நிலையம் மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவில் 9 வழக்குகள் உள்ளது.

இவரது குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின்படி, குப்புசாமியை ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை, சிறையில் உள்ள குப்புசாமியிடம் போலீசார் வழங்கி கையெழுத்து பெற்றனர்.முன்விரோத தகராறு: ஒருவர் கைதுநடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்த ரகுபதி மகன் சிலம்பரசன்,34; இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த கவுதமன், சிவவிஷ்னுராம்.இவர்களுக்குள் நிலம் சம்மந்தமாக முன் விரோதம் இருந்தது. சிலம்பரசன் தாய் உத்திரகுமாரி நிலத்தில் தண்ணீர் பாய்ச்சினார்.

அப்போது கவுதமன் நண்பர்களுடன் மோட்டரில் குளித்ததை, உத்திரகுமாரி தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த கவுதமன் உத்திரகுமாரியை திட்டினார். தகவலறிந்த சிலம்பரசன், கவுதமனை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கவுதமன், சிவவிஷ்னுராம் சேர்ந்து சிலம்பரசனை கத்தியால் வெட்டியதில் அவரது கைவிரல்கள் துண்டானது. அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், கவுதமன், சிவவிஷ்னுராம் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, சிவவிஷ்னுராமை கைது செய்தனர்.

கொலை மிரட்டல்: வாலிபர் கைதுபெண்ணாடம்: விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர், கடந்த 18 ம்தேதி அதே பகுதியில் வயலுக்கு, தோழியுடன் சென்று, வீட்டிற்கு வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் செல்வமணி, 25, குடிபோதையில் சிறுமியை வழிமறித்து ஆபாசமாகத் திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். சிறுமி கொடுத்த புகாரின்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து செல்வமணியை கைது செய்தனர்.மகள் மாயம்: தாய் புகார்கடலுார்: கடலுார், கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேல் மகள் வினிதா, 21; இவர், நேற்று முன்தினம் வீ்ட்டில் இருந்து மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. தனது மகள் சேலம், தாரமங்கலத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவருடன் அடிக்கடி மொபைலில் பேசினார்.

இதனால், அவர் மீது சந்தேகம் உள்ளது என வினிதாவின் தாய் அஞ்சலை, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்த வினிதாவை தேடி வருகின்றனர்.சூதாடிய நால்வர் கைது கடலுார்: கடலுார் முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சங்கொலிக்குப்பம் தைல மரத் தோப்பில் பணம் வைத்து சூதாடிய செம்மங்குப்பத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 40; கோபாலகிருஷ்ணன், 35; திருநாவுக்கரசு, 32; தர்மதுரை, 40; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X