விழுப்புரம் : தொழில் பழகுநருக்கான பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;மத்திய அரசு மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட உள்ள ஸ்ட்ரைவ் திட்டத்தின் கீழ் தொழில் பழகுநருக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அளிக்கும் பொருட்டு தொழில் நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு, சங்கங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதி வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய தகுதி மற்றும் விண்ணப்ப படிவத்தை https://dgt.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் Striveclusters@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே 30.7.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 -223989 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE