சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாதவருக்கு அபராதம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் பகுதியில் முக சவசம் இல்லாமல் வருபவர்களுக்கு நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டிவனம் நகராட்சியில், கொரோனா நோய் தொற்றுால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துவிட்டது. இந்நிலையில் திண்டிவனம் நகருக்கு பல்வேறு கிராமங்களிலிருந்து அதிக அளவில் பொது மக்கள் வருகின்றனர்.இப்படி வருபவர்களில் பலர் முக கவசம் அணியாமல் வருவதால் நோய் தொற்று அதிகரிப்பதால், முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு போலீசார் மற்றும் நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகின்றது.

திண்டிவனத்திலுள்ள நேரு வீதி, தாலுகா அலுவலகம், செஞ்சி ரோடு ஆகிய இடங்களில் நகராட்சி ஊழியர்கள் சார்பில் நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் இதுவரை 1600 பேர் மீது முக கவசம் அணியாமல் வந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X